உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடராஜர் கோவிலில் தேசிய கொடியேற்றம் 

நடராஜர் கோவிலில் தேசிய கொடியேற்றம் 

சிதம்பரம்:குடியரசு தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில், தேசியக் கொடி ஏற்றப்பட்டது.நாடு முழுதும் 75வது குடியரசு தினம் நேற்று கொண்டாட்டது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலின் ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.அதையொட்டி, பொது தீட்சிதர்களின் கோவில் கமிட்டி செயலர் சிவராம தீட்சிதர் தலைமையில், வெள்ளி தாம்பாலத்தில், மூவர்ண தேசியக் கொடி வைக்கப்பட்டு, சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து, மேளதாளங்களுடன், தேசியக் கொடி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, 152 அடி உயர, கீழவீதி ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ