உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு: 5 பேர் கைது

முன்விரோத தகராறு: 5 பேர் கைது

கடலுார் : முன்விரோத தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டிச்சாவடி அடுத்த மேல் அழிஞ்சிப்பட்டைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, 60; ஆறுமுகம், 65; சகோதரர்களான இருவருக்கும் சொந்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டின் அருகில் ஜல்லி கொட்ட ஏற்பாடு செய்தார். அப்போது, கிருஷ்ணமூர்த்தி தனது மருமகளுக்கு வளைகாப்பு ஏற்பாடு என்பதால் ஜல்லி கொட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பினர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை தாக்கினர். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகம், மகன்கள் அருண்ராஜ், அருண்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை