உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து பைக், பொருட்கள் திருட்டு

வீடு புகுந்து பைக், பொருட்கள் திருட்டு

புவனகிரி: கீரப்பாளையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் கதவு மட்டும் கேட்டை உடைத்து, பைக் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கீரப்பாளையம் டி.டி.கே., நகரை ச் சேர்ந்த பன்னீர்செல்வம்,73;ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 20 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமாக கீரப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு கீரப்பாளையம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் நிறுத்தி இருந்த பைக் காணாமல் போனதுடன், வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் மற்றும் புடவைகள் உள்ளிட்டவைகள் காணாமல் போனது தெரிய வந்தது.புகாரின் பேரில் புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ