உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்தில் வீடு சேதம்

தீ விபத்தில் வீடு சேதம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். நேற்று முன்தினம் காலை இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர். இதில், கூரை வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. தகவல் அறிந்த பாண்டியன் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். கவுன்சிலர் ரமேஷ், அ.தி.மு.க., நிர்வாகிகள் குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ