உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் கணவன் மனைவி பலி

விபத்தில் கணவன் மனைவி பலி

கடலுார் : கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுராமன், 42,. இவரது மனைவி ஷர்மிளா,40, இருவரும், நேற்று இரவு 9:30 மணியளவில், கடலுார் பகுதியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக வந்தனர். ஆலப்பாக்கம் மேம்பாலத்தில் வந்தபோது, சிதம்பரத்திலிருந்து கடலுார் நோக்கிச்சென்ற கார் மோதியது. விபத்தில், ரகுராமன், அவரது மனைவி ஷர்மிளா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் வந்தவர்கள், சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புதுச்சத்திரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை