உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு வேறு சம்பவங்களில் சிறுமிகள் கர்ப்பம் சிறுவன் உட்பட இருவர் மீது போக்சோ

இரு வேறு சம்பவங்களில் சிறுமிகள் கர்ப்பம் சிறுவன் உட்பட இருவர் மீது போக்சோ

பண்ருட்டி: பண்ருட்டியில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கி, திருமணம் செய்தவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.பண்ருட்டி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் தெய்வநாதன். இவரது மகன் முருகன்.26; இவர் உறவினரின் 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.பின் திருமணம் செய்துகொண்டதில் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து முருகனை தேடி வருகின்றனர்.

மேலும் ஓரு போக்சோ வழக்கு பதிவு:

பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் . இவர் கடலுார் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அண்ணாகிராமம் ஒன்றியம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார். புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !