உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார்: கடலுார் மைய நுாலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் 57வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு சர்வதேச ரோட்டரி மற்றும் ஜோதி கண் பராமரிப்பு மையம், ஆரஞ்சு விஷன் சென்டர் ஆகியன சார்பில் கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் பாஸ்கரன், கவுரவத் தலைவர் சுதர்சனம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) சக்திவேல் வரவேற்றார். பேராசிரியர் ராஜா வாழ்த்திப் பேசினார்.விழாவில், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஓய்வு பெற்ற மாவட்ட மைய நுாலகர் சந்திரபாபு, நுாலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முதல் நிலை நுாலகர் (பொறுப்பு) ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை