மேலும் செய்திகள்
கருத்தரங்கம்
20-Sep-2024
கடலுார் : கடலுார் குமாரப்பேட்டை நியூ மில்லேனியம் கல்வியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு பி.எட்., வகுப்பு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, நியூ மில்லேனியம் பவுண்டேஷன் சொசைட்டி தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நியூ மில்லேனியம் குழும நடப்பு கல்வி ஆண்டு இயக்குனரும், சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை தலைவருமான டாக்டர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் சதீஷ் வரவேற்றார். நிர்வாக அதிகாரி ஆனந்தஜோதி, கல்வி ஆலோசகர் அலெக்சாண்டர் வாழ்த்துரை வழங்கினர்.அப்போது, கல்லுாரி உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் ஆண்டு மாணவி எழிலரசி நன்றி கூறினார்.
20-Sep-2024