உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்டர் மீடியனில் தேவையற்ற இடங்களில் இடைவெளியால் விபத்துகள் அதிகரிப்பு

சென்டர் மீடியனில் தேவையற்ற இடங்களில் இடைவெளியால் விபத்துகள் அதிகரிப்பு

மந்தாரக்குப்பம், : கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் பல்வேறு இடங்களில் தேவையற்ற இடைவெளியால் வாகன விபத்துக்கள் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை நான்கு வழிச்சாலை அமைத்து சாலையை அகலப்படுத்தி இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கும் பணியை செய்துள்ளனர். சாலை விபத்துக்களை குறைப்பதற்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறை தேவையில்லமால் இடைவெளி விட்டுள்ளதால் வாகனங்கள் சாலையில் செல்லும் போது திடீரென புகுந்து அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்டர் மீடியனில் பல்வேறு இடங்களில் உள்ள தேவையற்ற இடைவெளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை