உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாய் கடி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாய் கடி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தெரு நாய் கடியால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கணபதி நகர், பாலாஜி நகர், எஸ்.பி. டி.எஸ்., நகர், கே.வி.ஆர்., நகர், வியாபாரிகள் வீதி, சின்ன சாமிநாயுடு நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதி களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி வழியாக நடந்து செல்லும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விடமால் துரத்தி கடிக்கிறது.இதனால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் இரவு நேரத்தில் தெருவில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி ஜந்து பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்டவர்கள் தெருநாய் கடிக்கு தடுப்பு ஊசி போட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். எனவே தெரு நாய்களை காப்புக் காட்டில் விட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ