உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு பள்ளியில் சுதந்திர தினம்

சிறப்பு பள்ளியில் சுதந்திர தினம்

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ரிஷப் ஜெயின் சிறப்பு பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. தாளாளர் மற்றும் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் அன்புக்குமரன், தலைமை ஆசிரியர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் பிரபாகர் வரவேற்றார். உதவி ஆளுநர் அசோக்குமார், நிர்வாகிகள் சாமுவேல் கென்னடி, கார்த்தி, பிரகாஷ்ரான், பேராசிரியர் பரமசிவம், விருத்தகிரி, சம் பத் பங்கேற்றனர். பல்வேறு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !