சுதந்திர தின விழா கோலாகலம்
பண்ருட்டி: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா கொண் டாட்டப்பட்டது. பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தேசிய கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஓ., க்கள் மீராகோமதி, பாபு, இன்ஜினியர்கள் சங்கர், கல்யாணசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், அன்பழகன், வழக்கறிஞர்கள் அரிதாஸ், ஜெகஜீவன்ராம், செல்வம், செழியன், முருகன், மாசிலாமணி பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்யா, இன்ஜினியர் கிருஷ்ணகுமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். நெய்வேலி வடக்குத்து ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் யமஹா விற்பனை நிறுவனத்தில் நிறுவன மேலாண் இயக்குனர் ஜெகன் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விற்பனை பிரிவு மேலாளர்கள் தனசேகரன், சிங்காரவேல் முன்னிலை வகித்தனர். நிர்வாகப் பிரிவு ஷர்மிளா, ஆர்த்தி, வைஷ்ணவி, மணிமாறன், விற்பனை பிரிவு செல்வமணி, ரவிசங்கர், ராமச்சந்திரன், ராம், பவித்ரன், ராஜேஸ்வரி, ஜெயப்பிரகாஷ், பானுப்ரியா பங்கேற்றனர். நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில் சேர்மன் ஜெயந்தி தேசிய கொடியேற்றினார். துணை சேர்மன் கிரிஜா, தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், வி.சி., நகர செயலாளர் திருமாறன் பங்கேற்றனர். மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் ஜெயமூர்த்தி, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கவிதா கொடியேற்றினர். திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் தேவநாதன், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பூங்கொடி முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் கொடியேற்றினார். விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். துணை சேர்மன் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். நகரமைப்பு அலுவலர் செல்வம், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், கவுன்சிலர்கள், அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.