மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
கடலுார்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, கடலுாரில் இண்டி கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, வி.சி., மாவட்ட செயலாளர் செந்தில், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., குளோப் முன்னிலை வகித்தனர்.இதில், கடலுார் அண்ணா பாலம் அருகில் இருந்து இண்டி கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாரதி சாலை வழியாக ஊர்வலமாக மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் வரை சென்றனர். அங்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கலையரசன், ஓ.பி.சி., பிரிவு மாநில செயலாளர் ராமராஜ், மீனவர் பிரிவு கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Dec-2024