மேலும் செய்திகள்
மா.கம்யூ., வட்டக்குழு கூட்டம்
05-Nov-2024
பெண்ணாடம்: பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் வரும் 5ம் தேதி மறியல் போராட்டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது.பெண்ணாடம் அடுத்த இறையூரில் நடந்த இந்திய கம்யூ., கூட்டத்திற்கு, உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், முருகையன், ஒன்றிய செயலாளர் கடவுள் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு ரமேஷ் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுந்தரவடிவேல், கொளஞ்சி, ராமகிருஷ்ணன், ராமு, கலியபெருமாள் பலர் பங்கேற்றனர்.இதில், பெண்ணாடம் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பது. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டிப்பது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 5ம்தேதி பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் மறியல் போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
05-Nov-2024