மாற்றுத்திறனாளிகள் தினம்
புவனகிரி; புவனகிரி வட்டார வள மையம் சார்பில், தேசிய மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு தலைமைதாங்கினார். சிறப்பு ஆசிரியர் நீலா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், ஜானகிராமன், மதினா முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமி, செல்வி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்குப் பின் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இயன்முறை மருத்துவர் சிந்துஜா நன்றி கூறினார்.