உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வன்னியர் சங்க தலைவருக்கு மிரட்டல்; வி.சி., கட்சியின் பெண் நிர்வாகி கைது

வன்னியர் சங்க தலைவருக்கு மிரட்டல்; வி.சி., கட்சியின் பெண் நிர்வாகி கைது

புவனகிரி; புவனகிரியில், வன்னியர் சங்கத் தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக, வி.சி., கட்சி பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த வி.சி., கட்சி ஆர்ப்பாட்டத்தில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்டோரை அவதுாறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக, பா.ம.க., நகர செயலாளர் கோபிநாத் போலீசில் புகார் அளித்தார்.புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, வி.சி., கட்சி நிர்வாகியான, சிதம்பரம் அருகே நாஞ்சலுாரை சேர்ந்த முருகன் மனைவி செல்வராணி,45; என்பவரை கைது செய்தனர்.மேலும், வி.சி., கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழொளி, கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் அறிவுடைநம்பி, நீதிவள்ளல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை