உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி

மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத் தலைவர் அறிவழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து விளக்கி பேசினார்.விழாவில், இணை பேராசிரியர்கள் ராஜேந்திரன், சுடர்விழி, ஆனந்த் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ