உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாமல்லபுரம் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மாமல்லபுரம் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

சிறுபாக்கம்: மாமல்லபுரத்தில் நடக்கும் தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்க கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரான அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவுபடி, தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்புக்காக பயிற்சிக் கூட்டம், வரும் 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு மாமல்லபுரம் இ.சி.ஆரில் நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கடலுார் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க., நகர, பேரூர், ஒன்றிய, வார்டு, கிளை செயலர்கள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி