வாலிபால் போட்டியில் பங்கேற்க அழைப்பு
பண்ருட்டி : பண்ருட்டியில் வரும் 28ம் தேதி நடக்கும் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் பங்கேற்கலாம் என, மாவட்ட வாலிபால் கழக செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். அவரது அறிக்கை: கடலுார் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு வரும் 28ம் தேதி பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. ஆண்களுக்கான பிரிவில் முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசு 8,000 ரூபாயும், பெண்கள் பிரிவில் முதல் பரிசு 8,000, 2ம் பரிசு 6,000 ரூபாய் வழங்கப்படு கிறது. நுழைவுகட்டணம் இல்லை.