உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் இளங்கோவன், 37. சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 20ம் தேதி, இவரது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு காசிக்கு சென்றனர்.இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள், ரூ.17, 500 பணத்தை திருடி சென்றனர்.நேற்று வீட்டிற்கு வந்த இளங்கோவனுக்கு திருடுபோன விஷயம் தெரியவந்தது.இதுகுறித்து இளங்கோவன் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ