உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 27 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், சென்னை டெல்பி டி.வி.எஸ்., டெக்னாலஜி லிமிடெட் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி புருஷோத்தமன், பங்கேற்று நேர்காணல் நடத்தினார்.முகாமில் இ.சி.இ., இ.இ.இ., மற்றும் மெக்கானிக்கல் ஆகிய துறையில் இருந்து, 35 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில், 22 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ஆனந்தவேலு மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை