உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஜெ., பிறந்த நாள் விழா

 ஜெ., பிறந்த நாள் விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அகரத்தில், நகர ஜெ., பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சுந்தர், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த் முன்னிலை வகித்தனர். நகர ஜெ.,பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம் வரவேற்றார். முன்னாள் முதல் வர் ஜெயலிதா படத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் துணை சேர்மன்கள் முடிவண்ணன், வாசுதேவன், மாநில பொதுக்குழு சிவ சிங்காரவேலு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோபி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா, ஒன்றிய மீனவரணி செயலாளர் சிவக்குமார், செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணியன், கனகராஜ், உட்பட பலர், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ