மேலும் செய்திகள்
பாரம்பரிய விளையாட்டு போட்டி
15-Jan-2025
பெண்ணாடம் : தை திருநாளையொட்டி, பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் நேற்று முன்தினம் நடந்த இளவட்ட கல் துாக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்ற நிர்வாகி தமிழ்நிகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், கனகசபை முன்னிலை வகித்தனர். மணியரசன் வரவேற்றார். கிராம மக்கள், இளைஞர்கள் உட்பட பங்கேற்றனர்.இதில், மாலை 4:00 மணியளவில் இளைஞர்களுக்கான வழுக்கு மரம் ஏறுதல், ஆண்கள் இளவட்ட கல் துாக்குதல், கபடி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். மாலை 5:00 மணியளவில் உயிர்ம வேளாண்மை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தற்சார்பு வாழ்வியல், தமிழர் மருத்துவம் ஆகிய தலைப்புகளில் பேசப்பட்டது. திருவள்ளுவர் தமிழ் மன்ற நிர்வாகி விக்னேஷ் நன்றி கூறினார்.
15-Jan-2025