மேலும் செய்திகள்
கைப்பந்து போட்டி பரிசளிப்பு
21-Aug-2025
கடலுார் : கடலுார் அடுத்த சமட்டிக்குப்பத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், கடலுார் உண்ணாமலை செட்டி சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி, முதல் பரிசை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கடலுார் அடுத்த சமட்டிக்குப்பத்தில், எஸ்.கே.எம்., எல்.ஜி.,கபடி அசோசியேஷன் சார்பில் பத்தாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, அரியலுார், நாகப்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 48 அணிகள் பங்கேற்றன. அதில் கடலுார் உண்ணாமலை செட்டி சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் வென்று முதல் பரிசு 20ஆயிரம் ரூபாயை வென்று சாம்பியன் கோப்பையை வென்றது. வெள்ளக்கரை அணி இரண்டாம் பரிசையும், கீழக்குப்பம் மற்றும் வழிசோதனை பாளையம் கபடி அணியினர் மூன்றாவது பரிசையும் பெற்று வெற்றிபெற்றன. முதல் பரிசை வென்ற உண்ணாமலை செட்டிசாவடி அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் குணசேகர் தலைமையிலான அணியினருக்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டுவிழா நடந்தது.
21-Aug-2025