காமராஜர் பிறந்த நாள்
கடலுார்; கடலுாரில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கடலுார் வண்டிப்பாளையத்தில் காமராஜர் 123வது பிறந்த நாளை முன்னிட்டு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் தாமோதரன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆறுமுகம், சந்திரன், அண்ணாமலை, கலியமூர்த்தி, ரஹீம், கார்த்திகேயன், ஆறுமுகம், ஏழுமலை, அன்பழகன், குப்புசாமி, இளைஞர் காங்., ஆறுமுகம், ராமராஜ், விக்கி உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கடலுார் டவுன்ஹால் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.