மேலும் செய்திகள்
ரேஷன் கடை அமைக்கக்கோரி கோட்டேரி கிராம மக்கள் மனு
28-Dec-2024
கடலுார்; பேரூராட்சியில், கிராமத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.விருத்தாசலம் அடுத்த கர்ணத்தம் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமமாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றோம். கர்ணத்தம் கிராமத்தை, மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டத்தை மக்கள் இழக்க நேரிடும். கிராம மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கிடைக்காது. இதனால் பல வகைகளில் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, கர்ணத்தம் கிராமத்தை, மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் இணைப்பதை மறு ஆய்வு செய்து, மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-Dec-2024