உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கார்த்திகை பட்ட காய்கறி விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு விவசாயிகளுக்கு அழைப்பு

 கார்த்திகை பட்ட காய்கறி விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு விவசாயிகளுக்கு அழைப்பு

விருத்தாசலம்: நல்லுார் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் கார்த்திகை பட்ட காய்கறிகளின் விதைகள் மானியத்தில் வழங்கப்படுவதாக, உதவி இயக்குனர் அலெக்ஸ் தெரிவித்துள்ளார். அவரது செய்திக் குறிப்பு: நல்லுார் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக போதிய அளவு மழை பெய்துள்ளதால் கார்த்திகை பட்ட சாகுபடி பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளன. மழை மற்றும் கார்த்திகை விரத காரணங்களால் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இனிவரும் பண்டிகைகள் காரணமாக தை மாதம் வரை, காய்கறிகளின் விலையேற்றம் நீடிக்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்ய வேண்டும். மேலும், தோட்டக்கலை துறையால் கார்த்திகை பட்டத்திற்கு ஏற்ற காய்கறிகளான அவரை, பாகல், புடல், பீர்க்கன், கத்திரி, வெண்டை, மிளகாய், வெங்காயம், முருங்கை ஆகிய பயிர்களின் விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானிய திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு உரிய சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை கொடுத்து பயனடையலாம். இதற்காக, ஏ.சித்துார் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலகத்திலோ அல்லது தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலரையோ அணுகி பயன்பெறலாம். மேலும், உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும், தற்போதைய மழையினை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் பயிர் செய்யவும் நீர் பாசன வசதி உடைய விவசாயிகள் அனைவரும் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ளலா ம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ