உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், நகர அவைத் தலைவர் தங்கவேல், முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், நிர்வாகிகள் சரவணன், கோவிந்தராஜ், சிவபாலன், கோமு, புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை