உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுார் துறைமுகத்தில் கிருஷ்ணர் கோவில் திருப்பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கடலுார் துறைமுகம் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணா யாதவ சங்கத்தினர் திருப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. டாக்டர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் சேம்பர் ஆப் காமர்ஸ் கடலுார் கிளை தலைவர் துரைராஜ், திருப்பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினர். கோவிலில் முன் மண்டபம் அமைத்தல், அழகிய துாண்கள், கிரானைட் தரை, கோசாலை, மடப்பள்ளி, அலங்கரிக்கப்பட்ட கதவுகள் என பல்வேறு அம்சங்களுடன் திருப்பணிகளை மேற்கொள்வது. திருப்பணிகளை விரைந்து முடித்து தை மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்துவது என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் கிருஷ்ணா யாதவ சங்க நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ