உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணாலயா தியேட்டர் 39ம் ஆண்டு துவக்க விழா

கிருஷ்ணாலயா தியேட்டர் 39ம் ஆண்டு துவக்க விழா

கடலூர்: கடலுார் கிருஷ்ணாலயா தியேட்டர் 39ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவையொட்டி உரிமையாளர் துரைராஜ், தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் மற்றும் தியேட்டர் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார். கோமதி துரைராஜ் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து, தியேட்டர் நிறுவனர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மேலாளர்கள் பாலாஜி ஆனந்தன், லட்சுமணன், மனிதவள அலுவலர் வெங்கடபிரசாத், ஆபரேட்டர்கள் சிவா, சரவணன், ஜி.ஆர்.கே., குழுமத்தைச் சேர்ந்த பிரபு, கபில், இளந்திரையன், செல்வா, விஷ்வா, தங்கராசு, ஏ.ஜி.எஸ். குழுமம், ஜி.ஆர்.கே.குழும ஊழியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். உரிமையாளர் துரைராஜ் கூறுகையில், '1986ம் ஆண்டு துவங்கப்பட்ட எங்கள் தியேட்டர் 39வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் திருப்தியாக சினிமாவை கண்டுகளிக்கும் நோக்கில் குளிர்சாதன வசதி, மலிவு விலையில் தின்பண்டங்கள், சிறப்பான இருக்கை, சுகாதாரமான கழிவறை வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளன. எங்கள் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் திரைப்படத்தை மகிழ்ச்சியோடு கண்டுகளித்துச்செல்ல வேண்டும் என்பதே எங்கள் தலையாய நோக்கம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை