மேலும் செய்திகள்
கே.எஸ்.ஆர். ைஹடெக் பள்ளியில் சங்கம திருவிழா
18-Apr-2025
ஞானகுரு வித்யாலயா பள்ளி சாதனை
10-May-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கே.எஸ்.ஆர்.,ைஹடெக் சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ைஹடெக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் தொடர்ந்து 10வதுஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் பார்கவி 490 மதிப்பெண் பெற்று முதலிடம், மீரா 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், லலிதாம்பிகை 487 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். அதேபோல், பிளஸ் 2 மாணவி காவியா 473 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் விருத்தகிரி 471 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் ரக்ஷிதா, ஸ்ரீ ஆராதனா ஆகியோர் 465 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல், செயலர் அனிதா சுந்தரவடிவேல், நிர்வாக இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ், பள்ளி முதல்வர் பெடரீஷியா செபஸ்டியன் ஆகியோர் பாராட்டினர்.
18-Apr-2025
10-May-2025