உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த சான்றோர்பாளையம், பச்சைவாழியம்மன் சமேத மன்னாதசுவாமி கோவிலில் வரும் நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கடலுார் முதுநகர் அடுத்த சான்றோர்பாளையத்தில், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, பச்சைவாழியம்மன் சமேத மன்னாதசுவாமி, வாழ்முனி மற்றும் இதர ஆறு முனிகள், குதிரை, காத்தாயி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், மகாவிஷ்ணு, பூங்குறவன், குறத்திகள், அக்னிவீரன், மாரியம்மன் மற்றும் பைரவர் சன்னதிகள் திருப்பணி நிறைவுற்று வரும் நவ. 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நவ. 2ம் தேதி காலை 9 மணிக்கு மேல் , விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், கோ பூஜை, தன பூஜை, , கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜை, முதற்கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. நவ.3ம் தேதி காலை 9மணிக்கு மேல் விமானம் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், குலதெய்வ வழிபாட்டினர் மற்றும் சான்றோர்பாளையம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !