உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

கடலுார்: சான்றோர்பாளையம் பச்சை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கடலுார் முதுநகர், சான்றோர்பாளையம் பச்சை வாழியம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இந்நிலையில், காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, யாத்ராதானம், 9:00 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி