உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செல்லியம்மன் கோவிலில்  விளக்கு பூஜை

செல்லியம்மன் கோவிலில்  விளக்கு பூஜை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஷ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, சாமுண்டி என சப்த கன்னிகைகள் உள்ளன. இக்கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும்.இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி பூஜைகள் கடந்த 25ம் துவங்கியது. இதனையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ராமு பூசாரி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ