நிலம் மோசடி: 2வது முறையாக மனு
கடலுார் : போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 3 கிராமத்தினர் மனு அளித்தனர். கடலுார் அடுத்த நடுக்குப்பம், மேலக்குப்பம், நல்லாத்துார் கிராமங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோரிடம் கடந்த 18ம் தேதி போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தனர். இந்த மனு சம்மந்தமாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நல்லாத்துார், நடுக்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் வரதராஜலு தலைமையில், போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 2வது முறையாக மனு அளித்தனர்.