27 பேருக்கு மனைப் பட்டா வழங்கல்
சிதம்பரம்: சிதம்பரத்தில், 27 பேருக்கு மனைப் பட்டா வழங்கப்பட்டது. சிதம்பரம், 33வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர், விளாந்திர மேடு நீர்நிலை பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, வசித்து வந்த 27 குடியிருப்புகளை கோர்ட் உத்தரவுப்படி, இடித்து அகற்ற வருவாய் துறையினர் முற்பட்டனர். இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடம் வழங்கிய பின் வீடுகளை இடிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மாற்று இடம் வழங்கிய பின், ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சிதம்பரம் அடுத்த, பெரியகுமட்டி பகுதியில் உள்ள புறம்போக்கு இடம் அடையாளம் காணப்பட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று, 27 குடும்பங்களுக்கு, தாசில்தார் கீதா அந்த இடத்திற்கான பட்டாவை குடும்பத்தினரிடம் வழங்கினார். உடனடியாக ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வலியுறுத்தப்பட்டது.