வழக்கறிஞர் உருவப்படம்; அய்யப்பன் எம்.எல்.ஏ., திறப்பு
கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினம் ஐ.எம்.ஏ., ஹாலில், வழக்கறிஞர் வேதநாயகம் உருவப்படம் திறப்பு விழா நடந்தது.விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உருவப்படத்தை திறந்து வைத்தார். டாக்டர் பிரவீன் அய்யப் பன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் புகழேந்தி, சிவக்கொழுந்து, மூத்த வழக்கறிஞர் அருணாச்சலம், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ரோட்டரி சங்க நிர்வாகி சன் பிரைட் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.