உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரம் வழங்கல்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடம் தீத்தடுப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு வாழப்பட்டில் பொதுமக்களிடம் தீத்தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.அதில் சமைக்கும் போது ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். எரிவாயு இணைப்பில் கசிவு உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். மின்சாரத்தால் பாதிப்பவர்களை தொடாமல் அப்புறப்படுத்த வேண்டும். உடனடியாக சி.பி.ஆர்.முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல வேண்டும்.எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த இடத்தை அசைக்காமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை