மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் வாசிப்பு திறன் ஆய்வு
10-Apr-2025
வடலுார் : வடலுார் அடுத்த வடக்குத்து கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அரசுப் பள்ளியில், 100 நாளில், 100 சதவீதம் கற்றல், வாசித்தல் திறன் ஆய்வு நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் செல்வக்குமார், அன்பரசி, ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமி ஆகியோர் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும், கணித பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும், கணித பாட ஆய்வுகளில் சிறப்பாக செய்து காட்டி பாராட்டுகளை பெற்றனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெண்ணிலா, ஆசிரியர் ராஜகுமாரி உடனிருந்தனர்.
10-Apr-2025