உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காடாம்புலியூரில் தொழுநோய் ஒழிப்பு திட்ட பயிற்சி கூட்டம்

காடாம்புலியூரில் தொழுநோய் ஒழிப்பு திட்ட பயிற்சி கூட்டம்

பண்ருட்டி: காடாம்புலியூரில் தொழுநோய் ஒழிப்பு திட்டம் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி தலைமை தாங்கினார். மாவட்ட இணை இயக்குனர் சித்திரைச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மருங்கூர் வட்டார அனைத்து கிராமங்களிலும் வரும் 16ம் தேதி முதல் டிச. 1ம் தேதிவரை 14 நாட்கள் தொழுநோய் குறித்து சர்வே பணி நடைபெற உள்ளது. அதில், தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறை, தொழுநோயால் ஏற்படும் ஊனம் பற்றியும் விரிவாக எடுத்து உரைத்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !