ஒன்றிணைவோம் நிகழ்ச்சி மாணவர்களுக்கு பரிசு
கடலுார்: வடலுார் வள்ளலார் கலை கல்லுாரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சார்பில் ஒன்றிணைவோம் நிகழ்ச்சி நடந்தது. சமூகநீதியும், நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், சமூகநீதி என்ற தலைப்பில் தமிழ் வாசக போட்டியும் நடந்தது. போட்டியில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,மனிஷா, நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், லதா ராஜ வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் உதயகுமார், செபாஸ்டின், புள்ளியியல் ஆய்வாளர் ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.