உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பெண்ணாடம் : பெண்ணாடம் எல்.ஐ.சி., அலுவலகம் முன், முகவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தியாகராஜன், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வெங்கடேசன், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். முகவர்கள் சிவப்பிரகாசம், சீனிவாச தத்தாச்சாரி, முல்லைநாதன், இளங்கோவன், ராஜேந்திரன், முருகன், ராஜகுமாரி, சித்ரா, ரஷ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கான பாலிசி கடன் வட்டியை குறைக்க வேண்டும். பிரீமியத்திற்கான ஜி.எஸ்.டி., வரியை நீக்குவது, முகவர்கள் குழு காப்பீடு வயது வரம்பை உயர்த்துவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முகவர் விஜயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை