பட்டாசு கடைக்கு உரிமம்; சப் கலெக்டர் ஆய்வு
சிதம்பரம் : சிதம்பரத்தில், பட்டாசு கடை உரிமம் வழங்க, இடங்களை சப் கலெக்டர் ராஷ்மி ராணி ஆய்வு மேற்கொண்டார்.சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு, பலர் விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்கள் கடை வைக்கும் இடம் பாதுகாப்பானதா என, சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்ணமிராணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அரசு விதிமுறைகளுக்குட்பட்டு இடம் உள்ளதா, தீ பாதுகாப்பு, அருகில் கூறை வீடுகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். சிதம்பரம், மேலவீதி, புவனகிரி பைபாஸ் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.