உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலங்கரை விளக்கம் முன்னாள் அமைச்சர் புகழாரம்

கலங்கரை விளக்கம் முன்னாள் அமைச்சர் புகழாரம்

கடலுார்,: உண்மை செய்திகளை அள்ளித்தந்து கலங்கரை விளக்கமாய் தினமலர் திகழ்கிறது என, முன்னாள் அமைச்சர் சம்பத் கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது; செய்தித்துறையில் 74 ஆண்டுகாலம் கடந்து 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ் சமுதாயத்தில் மிகப்பெரிய துாணாக விளங்குகிறது. பொதுமக்களுக்கு சுடச்சுட உண்மை செய்திகளை உரைகல்லாக வழங்கி வரும் நாளிதழ். கவர்ந்திழுக்கும் தலைப்புக்கள்,தெளிவான நடை, கண்ணுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்கள் அபாரமானது. வளர்ந்து வரும் தொழில் நுட்பம், காலநிலை மாற்றம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளைய தலைமுறையினருக்கு உண்மைச்செய்திகளை அள்ளித்தந்து கலங்கரை விளக்கமாய் வழிகாட்டும் 'தினமலர்' பவள விழாவை கடந்து இன்னும் பல ஆண்டுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை