உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

புவனகிரி: புவனகிரியில் மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புவனகிரி பாலம் அருகில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில் காரைக்கால் அடுத்த துரவி தெற்கு தெரு உதயசெல்வம்,34; என்பதும் அங்கிருந்து 750 மில்லி அளவு மற்றும் குவாட்டர் பாட்டில் 4, என புதுச்சேரி மாநில பிராந்தி பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ