மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
20-May-2025
கடலுார் : கடலுாருக்கு புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கும்தாமேடு சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக் ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.விசரணையில், மணக்குப்பத்தைச் சேர்ந்த நாராயணசாமி,26; என்பதும், புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக 100 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.உடன், போலீசார் வழக்குப் பதிந்து நாராயணசாமியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
20-May-2025