உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

நடுவீரப்பட்டு: கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். நடுவீரப்பட்டு பகுதியில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அஸ்வினி, விலங்கல்பட்டு பகுதியில் இன்று (நவ.,11) மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.சோதனையில் அரசு அனுமதியின்றி அரை யூனிட் கூழங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர், டிரைவர் குழந்தைக்குப்பத்தை சேர்ந்த செல்வம்,45; என்பவரை, நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தார். நடுவீரப்பட்டு போலீசார் லாரியை பறிமுதல் செய்து,டிரைவர் செல்வத்தினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !