மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்
08-Sep-2026
நடுவீரப்பட்டு,ஆக.28– கிராவல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் சி.என்.பாளையம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த டி.என்16 ஏ 5599 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தினர். உடன் லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சோதனையில் 3 யூனில் கிராவல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் லாரியை பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
08-Sep-2026