உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

விருத்தாசலம்; தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், பெரியார் நகர் ரவி, 63; தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரவியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ