உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம், பாலக்கரையில் மா. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் கலைச்செல்வன், குமரகுரு, திட்டக்குடி வட்ட செயலாளர் அன்பழகன், நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், விருத்தாசலம் கல்லுாரி மாணவர் ஜெயசூர்யா விபத்தில் இறந்ததாக திசை திருப்பும், ஆணவ படுகொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை